தனித்திருந்தும், அன்பில் திளைத்திருந்தேன்
என் தாயின் கருவறையில்
வலித்திருந்தும், வெளியே சிரித்திருந்தேன்
உன் காதல் முடிவுரையில்
தாயும் புறந்தள்ளினாள்
நீயும் புறந்தள்ளினாய்
எலும்புகள் விரியும் ஒலியும்
காதலை பிரியும் வலியும்
ஒன்றென அறிவேன் கண்மணியே!
தொப்புள்கொடி அறுத்தாலும்
சொந்தம் விட்டு போவதில்லை
காதலை நீ மறுத்தாலும்
உன்னை நான் பிரிவதில்லை
உயிரை கொடுத்த அன்னையும்
உணர்வை கொடுத்த உன்னையும்
காலம் முழுதும் மறவேனடி!
நெஞ்சில் வைத்து மகிழ்வேனடி!
இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.
தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.
நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.