பஞ்சு மெத்தை தலைகாணி
பன்னீர் தெளிச்சு வச்சாலும்
பாவிமக கண்ணுக்குள்ள
தூக்கம் மட்டும் இல்ல மாமா!
கண்ணுக்குள்ள நீயிருக்கன்னு
கண்ணு முழிச்சி நான் கெடக்கேன்
தனியா என்னை தவிக்க விட்டு
தூரதேசம் போனதேன் மாமா!
பொறையேறி விக்கும் போதும்
கண்ணு கலங்கி நிக்கும் போதும்
உள்ளுக்குள்ள சிரிப்பு மாமா!
உன்னோட நெனைப்பு மாமா!
மல்லிப்பூவு வாசம் உனக்கு
மனசு பூரா புடிக்குமுன்னு
குண்டுமல்லி பூவச்சூடி
பூவப் போல இருக்கேன் மாமா!
லவுக்கை இல்லா மாராப்பு
மச்சான் உனக்கு புடிக்குமுன்னு
கந்தாங்கி சீலை கட்டி
கச்சிதமா இருக்கேன் மாமா!
குட்டி குட்டி ஆசையெல்லாம்
எட்டி எட்டி பாக்குது மாமா!
எட்டு வாளி தண்ணி இறைச்சும்
காய்ச்சல் மட்டும் போகல மாமா!
நேந்துவிட்ட காளையெல்லாம்
மீசை வளர்த்து சுத்துது மாமா!
நீயில்லாத சாமத்துல
வீட்டுக் கதவ தட்டுது மாமா!
வாடாமல்லி வாடுமுன்ன
வண்டி வச்சி வந்துடு மாமா!
நெலாவும் பூமியும் உலாவுற வரைக்கும்
என்னை விட்டு போகாதீங்க மாமா!
இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.
தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.
நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.