அந்த நீல நிற மேலாடை
இன்னும் வைத்திருக்கிறாயா?
நான் காதலுரைத்த போது
உன் இதயதுடிப்பை பதிவு செய்ததே?
முதன் முதலாய் நீ பொய்யுரைத்த போது
மௌனமாய் சாட்சியளித்ததே?
பிரித்து விட்ட கூந்தல்
பார்க்க மறுத்த கண்கள்
வார்த்தை மறந்த உதடுகள்
கண்ணீரை தடுத்த இமைகள்!
அனைத்தும் என் கண்ணுக்குள்
நெருப்பாய் என் நெஞ்சுக்குள்!
எப்படி இருக்கிறாய் நீ?
பார்க்க வேண்டும் ஒரு முறை!
தேனீக்களை ஏமாற்றிய செவ்விதழ்கள்
உன் பேச்சுக்கு தாலாட்டும் லோலாக்கு
ஒப்பனை அறியாத பால் முகம்
அதில் குங்குமப்பூவாய் சில மச்சம்
பார்க்க வேண்டும் ஒரு முறை!
அமுதத்தை அள்ளி தந்தாலும்
குழந்தை தாய்ப்பாலுக்கு அழுவது போல்
சொர்க்கத்தில் வாழ்ந்து வந்தாலும்
நெஞ்சம் உனை காண ஏங்குதே
பார்க்க வேண்டும் ஒரு முறை!
என் கண்கள் என்ன குற்றம் செய்தது?
உன்னை பார்க்க தவமிருந்ததை தவிர!
வரம் தருவாயோ, உன்னை பார்ப்பதற்கு?
ஒரு நொடி போதும், நூற்றாண்டுகள் வாழ்வேன்!
பார்க்க வேண்டும் ஒரு முறை!
முகப்பு > வலைப்பதிவுகள்இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.
தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.
நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.