நீ. நான். நாம்.
27 Apr 2010
முகப்பு >
வலைப்பதிவுகள்
உன்வலியை நானறிந்து
தன்வலியாய் தானுணர்ந்து
என்னுயிரில் நீ கலந்து
நாம் எழுதிய கவியன்றோ ?.
நீயின்றி நானின்றி
நாமாகி கலந்தபின்
ஊனின்றி உயிரின்றி
நம் காதல் வாழுமன்றோ !.
குலமென்றும் மதமென்றும்
சுற்றமும், சூழும் சனமென்றும்
பழங்கதைகள் பலக்கேட்டு
நின்றிடுமோ நம் காதல் !.
பாடிப்பறந்த பறவையின்
சிறகொடித்ததோ நம் காதல்
ஓடித்திரிந்த மான்குட்டியின்
கால் முறித்ததோ நம் காதல் !.
பட்டுபுழு பட்டாம்பூச்சியாகும் போது
வலிகள் எல்லாம் பறந்திடுமே !..
கணவன் மார்பில் சாய்ந்துறங்கும் போது
ஆயிரம் சிறகுகள் முளைத்திடுமே !..
முகப்பு >
வலைப்பதிவுகள்
இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய
மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.
தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற
RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள்
மின்னஞ்சலிலும் பெறலாம்.
நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல்
இதோ.