விண்ணில் இருந்த தேவதை, மண்ணுக்கு வந்த நேரமோ
கண்ணன் என் மனதினில் பூங்கோதையின் ராகமோ
தன்னந்தனியே நிலவும் வானில் என்ன செய்யுமோ
உன்னைப் பிரிந்த வலியில் தேய்ந்தொழிந்து போகுமோ
ரயில் போகும் பாதையாய் நாமிருவர் செல்ல
கைகோர்க்கும் நேரத்தில் பூ மலரும் மெல்ல
உயிர் திருடும் முயற்சியில் என் கண்கள் வெல்ல
அதையுணர்ந்த கைகள் இடையணைத்து கொள்ள
கைதொடும் தூரத்தில் வெண்ணிலவு இருக்க
நான்தொடும் நேரத்தில் சொர்க்கமது திறக்க
வானவெளி வீதியில் நாமிருவர் மிதக்க
நட்சத்திர சாரலில் பூமிதனை மறக்க
நெடுஞ்சாலை இரவுகள் நம் காதல் சொல்லுதே
புலராத பொழுதுகள் நமைப் எழுப்பி செல்லுதே
தனிமையின் இனிமையில் இருவுயிர் குளிருதே
பனித்துளி ஒன்றிங்கே சூரியனை அணைத்ததே
உயிருள்ள சிற்பமாக,உறையட்டும் இந்த நொடி …
பூந்தென்றல் வாசமாக, வீசட்டும் நம் காதல் நெடி …
உயிரை வருடும் உணர்வினில் எல்லாம்
உயிர்த்திருப்போம் அது போதுமடி !…