மீண்டும் நீ வேண்டும் நண்பா

26 Feb 2010

முகப்பு > வலைப்பதிவுகள்

உயிரை உருக்கும் கலை
பெண்களுக்கென்று நினைத்திருந்தேன்
தவறென்று நிரூபித்தாய்

என்னை முற்றிலும் அறிந்தவர்கள்
முடிவு வரை இருப்பார்கள் என்றிருந்தேன்
தவறென்று நிரூபித்தாய்

காலங்கள் காயங்கள் ஆற்றும்
மாதங்கள் மனதை மாற்றும் என்றிருந்தேன்
தவறென்று நிரூபித்தாய்

நீ பேச மறுத்த இரவுகள்
உன் பாசத்தை பேசுகின்றன
நீ சிரிக்க மறந்த நிமிடங்கள்
என் வாழ்நாளில் குறைந்தன

எனக்காக ஓடி வருகிறாய்
மௌனத்தால் கொன்று செல்கிறாய்
வருவதால் உனை அழைப்பதா?
கொல்வதால் உனை தடுப்பதா?

நான் செய்ததென்ன?

நட்பின் கொலையா?
உண்மையின் விலையா?
அரிச்சந்திரனுக்கு வந்தது
என்னுடைய நிலையா?

இல்லாத காயங்கள் ஆற முடியாது
சொல்லாத சோகங்கள் தீர முடியாது!
நட்பை மறுக்கும் காரணம் தெரியும்
உன் ஊகம் தவறு - எப்போது புரியும்?

மீண்டும் நீ வேண்டும்
மீண்டு வர வேண்டும்

காத்திருக்கிறேன்
நட்புடன் நட்புக்காக!

முகப்பு > வலைப்பதிவுகள்

இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.

நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Life Coach

copyleft @ 2009.