ஒரு பார்வை
ஒரு வார்த்தை
ஒரு ஸ்பரிசம்
ஒரு நிமிடம்
கிடைக்குமோ? மீண்டும்?
ஈராறு ஆண்டுகள்
தொலைதூர தேசங்கள்
கலைந்துபோன கனவுகள்
மறந்துபோன உறவுகள்
கிடைக்குமோ? மீண்டும்?
நிலவுறங்கும் நேரத்திலும்
நாமுறங்கி போனதில்லை
நாவறண்டு போகையிலும்
நாவடங்க தேவையில்லை
அன்று!
கைத்தொடும் தூரத்தில்
கவிதையாய் நீயிருந்தும்
பார்க்க ஒரு வழியில்லை
பேச ஒரு மொழியில்லை
இன்று!
அயல்வீட்டு மலரென
மனமுணர மறுக்குதடி
கிடைக்காத தருணங்கள்
உயிர்வரை எரிக்குதடி
ஆற்றில் மிதக்கும்
இலையில் எறும்பு
கரையில் பூக்கும்
அருமலர் அரும்பு
தூரம் மட்டும் நிதர்சனம்!
முகப்பு > வலைப்பதிவுகள்இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.
தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.
நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.