கவிதைகளும் கவுண்டமணியும்.

04 Mar 2010

முகப்பு > வலைப்பதிவுகள்

நிலவுக்கு ஏன் வெட்கம் ?
தென்னை ஓலையில் ஒளிகிறதே
ஒ!.. உன்னை பார்த்ததாலா?

(டேய்.. அது வெட்கம் இல்ல.. கப்பு… இவளுங்க எல்லாம் என்னைக்கு டா குளிச்சிருக்காங்க ?..)

நான் எண்ணும் நட்சத்திரங்கள் மின்னுவதில்லை
உன் கண்ணின் மணியை பார்த்த பிறகு !

(ஒ.. சென்ட்ரல் ஜெயில்-ல கூரைய எடுத்துடாங்களா?… களி தின்னாலும் கவிதை போகல உனக்கு .. அட்ரா அட்ரா )

வெயிலில் நான்
வெளியே செல்வதில்லை ..
கண்ணுக்குள் வாழும் உனக்கு
வேர்க்கும் என்று !..

(செந்தில்: அண்ணே,நான் கண்ண மூடிட்டு செய்யுற வேலைய.. நீங்க கண்ண தொறந்துட்டு செய்வீங்களா அண்ணே ?)

கங்கையே !
நீ மோட்சமடையும் நாளின்று
என்னவள் குளிக்க வருகிறாள் !!!

(அப்பாடா.. கடைசியில குளிக்கணும் முடிவு பண்ணிட்டாளா ?…உலகம் பொழைச்சதுடா சாமி !..)

சிப்பியின்றி முத்துக்கள்
உருவாகுதே !
என்னவள் குளித்த துளிகள் !..

(ஆமாண்டா .. குளிச்ச தண்ணி, பல்லு துலக்குன பிரஷு, பிஞ்சி போன செருப்பு … எல்லாத்தையும் வச்சி மியுசியம் கட்டுங்க ..)

முல்லை பூக்களின்
கூட்டம் கண்டேன்
உன் சிரிப்பில் !..

(ஆத்தா.. நீ சிரிக்காத ஆத்தா.. புள்ள பயப்படுது.. கூட்டிட்டு போய் வேப்பல அடிக்கணும் போல இருக்கு.. )

என் தரிசு நிலங்கள், பூ பூக்குதே…
ஒரு துளி மழை இல்லாமல் !
ஒ… உன் பார்வை பட்டதாலோ?

(அப்படியே அம்மணிய, மதுர பக்கம், திருநெல்வேலி பக்கம் கொஞ்சம் பாக்க சொல்லுங்க .. தண்ணி இல்லியாம்)

திரியின்றி, நெய்யின்றி
அகலாக எரிவேன்!..
இரவிலும் உன்னை பார்க்க ..

(செந்தில்: அண்ணே, இதுல எப்டினே லைட் எரியும் .. விளையாடாதீங்கன்னே)

உதடுகளால் ஆடுகிறேன் கபடி
மூச்சு விடாமல்
என் தலையணை பஞ்சாகிறது !!!

(டேய்… நீ எந்த நேரத்துக்கு எந்த டைப்பா முழி-எ மாத்துவேனு எனக்கு தெரியும் .. கிளம்பு… கிளம்பு …)

கோடி கோடியாய் பணம்
செலவழிக்க முடியாமல் மனம்
நகை விரும்பாத நங்கையாய்
நீ …

(30 ரூபா குடுத்தா, 3 நாளைக்கு கண்ணு முழிச்சி வேலை பாக்குற மொன்ன நாயிக்கு .. பேச்சை பாரு )

கேளுங்கள் கொடுக்கப்படும்
தட்டுங்கள் திறக்கப்படும் !..
உன் மதம் சொன்ன வார்த்தைகள்
கேட்டதுண்டோ தோழி ?

(டேய் அதெல்லாம் பழசு, புது ஸ்டைலு … மம்மி…. டாடி ..)

தமிழ் - வற்றாத ஜீவ நதி
யார் சொன்னது ?
என்னவளை பாட
வார்த்தைகள் போதவில்லை !!!

(செந்தில்: அண்ணே, நீங்க பத்தாவது பெயில் அண்ணே… நான் எட்டாவது பாஸ் அண்ணே )

சொல்லும் பொருளே
சொல்லை சொன்னால்
சொல்லும் வார்த்தை
நெஞ்சில் ஏறுமோ ?

(அய்யய்யா .. கல்ல கண்டா, நாய காணோம் .. நாய கண்டா, கல்ல காணோம் .. மவனே நேர்-ல வாடி நீ )

முதற்கணம் மண்ணிலும்
மறுகணம் விண்ணிலும்
இயற்கையே குழம்பியதே ..
உனை பார்த்த அக்கணம் !..

(நெப்போலியன்-ம், ஓல்டு மாங்க்க்கும் சேத்து அடிச்சா அப்படி தான் இருக்கும்… தண்ணி சேத்துகடா-னா கேக்குறியா ?…)

ஒரு நொடியில்,
உன் பார்வையில்,
ஓராயிரம் கவிதைகள் !..

(நாராயணா.. இந்த கொசு தொல்லை தாங்க முடியல.. மருந்தடிச்சி கொல்லுங்கடா)

முகப்பு > வலைப்பதிவுகள்



இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.

தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.

நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Life Coach

copyleft @ 2009.