புகைத்ததுண்டு, புகைப்படத்துடன் பேசியதில்லை!
நகைத்ததுண்டு, நடுவீதியில் தனியாக இல்லை!
நடித்ததுண்டு, நட்பினிடத்தில் என்றுமில்லை!
வெடித்ததுண்டு, வெட்டுப்பட்டு வந்ததில்லை!
சிந்திக்காமல் சிரித்ததுண்டு
சிரித்துக்கொண்டே அழுததில்லை!
பேசிக்கொண்டே இருந்ததுண்டு
மௌனமொழி விளித்ததில்லை!
விழித்துக்கொண்டே உறங்கியதுண்டு
உறங்கமுடியாமல் விழித்ததில்லை!
பார்க்காமல் பழகியதுண்டு
பழகியபின் தவிர்த்ததில்லை!
இது தான் காதலா?
முகப்பு > வலைப்பதிவுகள்இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.
தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.
நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.