நான்: கேள்விகள் எப்படி மறையும்? நான் ஏன் கேள்வி கேட்க கூடாது? பதில் எப்படி கேள்விகளில்லாமல் அமையும்?
உலகின்றி அமையா உயிர் போலவா, கேள்விகளின்றி அமையா பதில்? சிந்திக்காதே. கேள்விகளில்லாமல் பதில் கிடைக்காதா? கேள்விகள் உன்னை ஒரு திசையில் மட்டுமே பார்க்கச்சொல்லும். எங்கு பார்க்கிறாய் என்பது உன் கேள்விகளின் ஆழத்தை பொறுத்தது. கேள்விகளற்ற அமைதியில் திளைத்திருக்கும் போது, உன்னால் எங்கும் பார்க்கமுடியும். கேள்விகள் தவறல்ல. பதில்களின் தன்மை கேள்விகளை பொறுத்து தான் அமையும்.
ஆம். கேள்வியின்றி அமையா பதில். இதுதான் உன் உண்மை. கேள்விகள் தேவையற்ற நிலை. இது நான் உன்னை அழைத்துச்செல்லுமிடம். வருகிறாயா?
நீ வருவாயென எனக்கு தெரியும். அதனால் தான் உன்னிடம் வந்தேன். நீ வருவதற்குமுன் உன் கேள்விகளை கேட்டு முடித்துவிடு.
பேச்சில்லாமல் பேசும்போது கேள்விகள் வேகத்தடை
புரியாமல் போகும்போது தான் கேள்விகள் தேவைப்படுகின்றன. நான் உனக்கு அனைத்தையும் உணர்த்தும்போது அவை தேவையில்லை. தங்குதடையின்றி பாயும் வெள்ளம் போலிரு. அணையிலிருக்கும் நீரை போலல்ல.
மீண்டும் பேசுவோம்.
இப்படிக்கு நான்.
முகப்பு > வலைப்பதிவுகள்இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்களுக்கு ஏதேனும் கேள்விகளோ அல்லது கருத்துக்களோ இருந்தால் என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கு எழுதவும். நான் அனைத்தையும் படிப்பேன், பதில் தேவையிருந்தால் பதிலளிக்கிறேன்.
தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற RSS முகவரியை தொடரலாம், அல்லது உங்கள் மின்னஞ்சலிலும் பெறலாம்.
நான் ஒரு புத்தகப்பிரியன். நான் படித்து மகிழ்ந்த, மீண்டும் படிக்கலாம் என்றென்னும் புத்தகங்களின் பட்டியல் இதோ.